ஆசை இராசா

www.Ullam.net

நினைவஞ்சலி

ஆசை இராசா

அமரர் ஆசை இராசா அவர்களின் வாழ்க்கை வரலாறு

சின்ன வயசில ரெம்ப சின்ன வயசில

அப்பு ஆச்சியின் பாசம் கடலின் எல்லையே

அவர்கள் போன பின்னரும் நினைவு போகவில்லையே

என் வாழ்க்கைப் பாதையில் நல்ல வழியினை காட்டி சென்ற அவர்கள்

என்றும் இதய தீபமே என்னில் வாழும் தெய்வமே


யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்து காத்து வரும் தெய்வம் நல்லைக் கந்தப்பெருமான் என்பது யாவரும் அறிந்த பேருண்மை.

இம்மாநிலத்தில் புகழ்பூத்த ஒரு கிராமம் சங்கானை. இக்கிராம மக்கள் விநாயகர் வழிபாட்டில் மிக்க பக்தி சிரத்தை மிக்கவர்கள்.

இக்கிராமத்தில் இனிய இல்லறம் நடாத்தி வந்த தம்பதியினர் அமரர்கள் திரு.திருமதி ஆசை சின்னக்குட்டி தம்பதியினர்.

இத்தம்பதியினர் சிலகாலம் தங்கள் திருமணத்தின் பின்னர் மலேசியாவில் சென்று வாழ்ந்து வந்தனர்.

அங்கு இவர்கள் நல்ல இல்லறவாழ்வில் திருமதி. இராசம்மா தம்பிப்பிள்ளை திரு. இராசா ஆகியோர் இரு பிள்ளைச் செல்வங்களாகக் கிடைத்தனர்.

இத் தம்பதியினர் சிலகாலம் மலேசியாவிலும் சிலகாலம் இலங்கையிலும் வாழ்ந்து வந்தனர். திரு. இராசா அவர்கள் தனது இளமைக்காலக் கல்வியைச் சுண்ணாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லுரியில் பெற்றுக்கொண்டார். பின்னர் அரச உணவுக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தில் சில காலம் கடமையாற்றிக் கொண்டே விவசாயத்துறைக்கு முன்னுரிமை கொடுத்து வாழ்ந்து வந்தார்.

சங்கானை கிழக்கில் வாழ்ந்து வந்த அமரர் இராசா அவர்கள் மாதகல் கிழக்கில் திருமணம் செய்து கொண்டார். மாதகலில் அமரர்கள் திரு.திருமதி சிற்றம்பலம்

வள்ளிப்பிள்ளை தம்பதியினர் தம் புதல்வியார் பாக்கியம் தம்மைத் திருமணம் செய்து கொண்டார்.இவ்வாறு இனிய உறவினருடன் வாழ்ந்து தனது இல்லற நல்வாழ்வில் அம்மையார் திருமதி. பாக்கியம் தம்முடன் இணைந்து மாதகல் கடம்ப முருகன் திருவருளால் பெற்றுக்கொண்ட ஏகபுதல்வன் திரு.கந்தசாமி அவர்களாவார்.

கொழும்பு 11 நாலாம் குறுக்குத்தெரு வெங்கடேஸ்வரா அன்ட் கோ உரிமையாளர் தாம் கந்தசாமி அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

திரு.கந்தசாமி அவர்களும் தந்தையாரின் வழியழல் இறைவழிபாட்டில் தன் தொழிலில் சிறந்து விளங்கி வருகின்றார்.

திரு.திருமதி கந்தசாமி பரமேஸ்வரி தம்பதியினர் தம் இல்லற வாழ்வின் நற்பலனாக அமரர் அவர்கள் கண்டுகொண்ட பேரப்பிள்ளைகள் எழுவர்.பீட்டப்பிள்ளைகள் பன்னிரெண்டு பேராவர்.

அறநெறியில் நின்று இல்வாழ்க்கை நடாத்திவந்த பெருமைக்குரியவர் அமரர் அவர்கள். அதன் காரணமாகவே பூரண வயது வரை தேகதிடம் குன்றாது வாழ்ந்து வந்வார். தன் வழியிலேயே தனது ஏக புதல் வரையும் வழிநடத்தி நின்றார். தந்தையின் வழியில் தனயனும் தன் பிள்ளைகளை வழிநடத்தி நிற்பதால் தந்தையார் வாழும் காலத்தேயே அதனைக் கண்டு மனம் பூரிப்படைந்திருந்தார்.

இனிய தம்பதியரின் தவப்பலனாக ஏக புதல்வர் திரு. கந்தசாமி அவர்களும் தன் சுயமுயற்சியில் தன் வியாபாரத் தொழிலை இளமையிலிருந்தே ஸ்திரப் படுத்திக் கொண்டார்.

சங்கானை செங்கற்படைப் பிள்ளையார்‚ மாதகல் புவனேஸ்வரி அம்பிகை‚ மாதகல் கடம்ப முருகன்‚ மருதடி விநாயகர்‚ நல்லைக்கந்தன் ஆசிகள் நிறையப் பெற்ற பெரியார்.

ஆலயத் திருப்பணிகளுக்குத் தன் கிராமத்தில் முன்னின்று பணிசெய்யத் தன் ஏக புதல்வரை வழி நடத்தி நின்ற பெருமையும் அமரரைச் சாரும்.

அமரர் தம்மை மகன்‚ மருமகள்‚ பேரப்பிள்ளைகள்‚ பீட்டப்பிள்ளைகள் அனைவருமே அன்பாக "அப்பு" எனவே அழைப்பார்கள். தனக்கெனத் தன் குடும்பத்துக்கென வாழாது பிறர்க்காகவும் வாழ்ந்த பெருமைக்குரிய பெரியார் இவரெனலாம்.

அமரர் தம் பெயர் அவர்தம் தந்தையாரின் பெயருடன் இணைந்து காணும்போது "ஆசை இராசா" எனப்படுவதும் செவிக்கினிய அர்த்தபுஷ்டி நிரம்பிய பெயர் அன்றோ!

மலேசியாவில் அமரர் அவர்கள் 'உணவகம்' (றெஸ்ரோறண்ட்) ஒன்றையும் முன்னர் நடாத்திபஇ பெருமையுடன் வாழ்ந்து வந்தவர். மலேசியாவில் வாழ்ந்த அனுபவத்தில் அவர் தம் வாழ்க்கை முறைகளிலும் பல சிறப்புகளைக் காணக்கூடியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அமரர் தம் தூய ஆத்மா நிலையான நித்திய ஆத்மசாந்தி பெறப் பிரதர்த்திப்பதோடு வாழ்க "ஆசை இராசா" அனும் நாமம் என வாழ்த்தி நிற்போமாக.